அனைவருக்கும் வணக்கம்! தென் கரோலினா தமிழ் சங்கத்தின் சார்பில், september 6 thethi கோடை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. சலூடா shohail பூங்காவில் உள்ள ரிவர் பிரீச் ஷட்டில் என்ற ரம்மியமான இடத்தில், நம் உறவுகள் அனைவரும் ஒன்று சேர்ந்த அழகான தருணங்கள் இவை.
"காலை 11 மணி. தென் கரோலினா தமிழ் சங்கக் குடும்பங்கள், ரிவர் பிரீச் ஷட்டிலில் ஒன்று சேரத் தொடங்குகின்றன. irumbu மேசைகளும், நாற்காலிகளும் நிறைந்த இந்த இடம், மின்விசிறிகளின் இதமான காற்றால் வரவேற்றது."
ஆனால், ஷட்டிலில் சிலந்திகளும், கம்பளிப் பூச்சிகளும் ஆங்காங்கே தென்பட்டன. இதைக் கவனித்த சிவா, ஒரு இயந்திர ஏர் சக்கரை எடுத்துக்கொண்டு துப்புரவுப் பணியில் இறங்கினார். கூலி படத்தில் சௌபின் olipan ஸ்பீக்கரைத் தூக்கி வருவது போல, தூக்கிக் கொண்டு சுத்தம் செய்த விதம், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அனைவரும் அந்த காட்சியை ரசித்துச் சிரித்தனர்."
"பகிர்ந்து உண்டால் பாசம் பெருகும்" என்பது நம் நம்பிக்கை. அதற்கேற்ப, இது ஒரு கூட்டுணவு கொண்டாட்டம்! ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீடுகளில் சமைத்த பலவிதமான சுவையான உணவுகளைக் கொண்டு வந்து, எல்லோருடனும் பகிர்ந்து உண்டனர். ஒரு பெரிய விருந்துக்கு குறைவில்லாமல், அனைவரும் மகிழ்ச்சியாய் உண்டு மகிழ்ந்தனர்.
சிறுவர்களின் சிரிப்பொலியும், விளையாட்டும் அந்த இடத்திற்கே ஒரு தனி அழகைக் கொடுத்தன. இந்த கொண்டாட்டம், அவர்களுக்கு புதிய நண்பர்களைப் பெறவும், உற்சாகமாய் விளையாடி மகிழவும் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது.
இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களும் தங்கள் வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு, சக தமிழ் உறவுகளுடன் மனம் விட்டுப் பேசினர். தங்கள் அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். இது ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, நம் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு நிகழ்வு.
சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டு, இந்த கோடை கொண்டாட்டத்தை ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றினர். குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டி வரை, அனைவரும் இந்த நிகழ்வை முழுமையாக ரசித்து அனுபவித்தனர்.
"மதிய உணவு முடிந்ததும், சிறிது நேரம் அரட்டையிலும், ஓய்விலும் திளைத்தனர் நம்மவர்கள். அனல் பறக்கும் வெயில் இருந்தாலும், உறவுகளுடன் பேசிக் களிக்கும் அந்த மகிழ்ச்சி, வெயிலின் உக்கிரத்தை மறக்கச் செய்தது".
"வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, நம் ஊர் நன்னாரி சர்பத் தயாரானது! எலுமிச்சையைப் பிழிந்து, நன்னாரி சிரப்பையும், பனிக்கட்டியையும் சேர்த்து, குளிர்ந்த நன்னாரி சர்பத் பரிமாறப்பட்டது. இது, இங்குள்ளவர்களுக்கு நம் தாய்நாட்டின் சுவை உணர்வை ஏற்படுத்தியது".
"குழந்தைகளுக்கான குதூகல விளையாட்டுகள் தொடங்கின. ஸ்பூனில் எலுமிச்சை வைத்து ஓடும் போட்டி, குழந்தைகளுடன் பெரியவர்களையும் உற்சாகப்படுத்தியது".
"பாரம்பரிய விளையாட்டான உரியடி போட்டி, பலத்த ஆரவாரத்துடன் அரங்கேறியது. கண்களைக் கட்டிக்கொண்டு, தொங்கும் பானையை உடைக்க முயற்சிக்கும்போது, சுற்றியிருந்தவர்களின் உற்சாகக் குரல்கள், விளையாட்டுக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்த்தன".
"குழந்தைகளுக்கான மற்றொரு ஜாலியான விளையாட்டு, தொங்கும் டோனட்டை கடித்துச் சாப்பிடுவது. கயிறுகளில் தொங்கவிடப்பட்ட டோனட்களை, கைகளைப் பயன்படுத்தாமல் கடித்து உண்ண முயற்சிக்கும்போது ஏற்பட்ட கலகலப்பும், சிரிப்பொலியும், அந்த மாலைப் பொழுதிற்கு மேலும் அழகு சேர்த்தது".
"இறுதியில், இந்த நாள், உணவு, விளையாட்டு, மற்றும் உறவுகளின் அரட்டை என, அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.
"இங்கு விளையாட்டுகள் களைகட்ட, மற்றொருபுறம், நம் இந்தியத் தேநீரின் சுவையான தயாரிப்பு நடந்துகொண்டிருந்தது. நறுமணமுள்ள இஞ்சி, மணமிக்க ஏலக்காய், பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்த தேநீர் கொதிக்கும்போது, அதன் வாசம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஒரு அருமையான தேநீர் தயாரானது."
"அனைவரும் ஆசையுடன் தேநீரைப் பருகினர். சுவையான தேநீருடன், விளையாட்டுகளையும் கண்டு களித்தது, இந்த நாளை மேலும் இனிமையாக்கியது."
"இதைத்தொடர்ந்து, CTK சார்பாக ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக தமிழ் பயின்ற, 1 முதல் 8 ஆம் nilai வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையும் வந்து சான்றிதழ்களைப் பெறும்போது, பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல், அவர்களின் எதிர்கால முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது."
"மீதமிருந்த உணவுகள், தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
"சான்றிதழ் வழங்கும் விழா முடிந்ததும், எல்லோரும் தன்னார்வத் தொண்டர்களாக மாறினர். ஒருங்கிணைந்து பூங்காவை சுத்தம் செய்தனர். யாரும் எந்தக் கட்டாயமும் இன்றி, தாமாக முன்வந்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தினர்."
ஒருவரையொருவர் சந்தித்த மகிழ்ச்சியுடனும், ஒரு இனிமையான நினைவுகளுடனும், பூங்காவிலிருந்து விடைபெறத் தொடங்கினர்."
"அனைவருக்கும் நன்றி தெரிவித்து, இந்த கொண்டாட்டம் இனிமையான நினைவுகளுடன் நிறைவுற்றது. மீண்டும் அடுத்த கொண்டாட்டத்தில் சந்திப்போம்!"